மாவட்டத்தில் நடந்து வரும் நெல் கொள்முதல் குறித்து விளக்கம்

1பார்த்தது
மாவட்டத்தில் நடந்து வரும் நெல் கொள்முதல் குறித்து விளக்கம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2025-2026 குறுவை பருவத்தில் செப்டம்பர் 3 முதல் நவம்பர் 3 வரை 1,04,754 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 3 அன்று ஒரே நாளில் 117 நிலையங்களில் 2,722 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவரை 88,348 மெட்ரிக் டன் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள், ஆலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 16,406 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, நகர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 3 அன்று ஒரே நாளில் சுமார் 3,706 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி