நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறு, குறு விவசாயிகள் சடலம்போல் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதனை நம்பி விவசாயிகள் காத்திருந்த நிலையில், கடன்கள் தள்ளுபடி செய்யப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.