துக்கமேளம் ஒலிக்க, ஒப்பாரியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

1பார்த்தது
நாகை அருகே திருமருகலில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரத் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும், நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வெளிப்படையான கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாகச் சென்று வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துக்கமேளம் இசைத்தும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி