நாகப்பட்டினம்: விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல்; ஆட்சியர் அறிவிப்பு

82பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற 23.12.2024 திங்கள் அன்று காலை 10.30 மணிக்கு "தேசிய விவசாயிகள் தினத்தை" முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. 

இவ்விழாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், கேட்டுக்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி