மருத்துவக் கல்விக்கான
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாகப்பட்டினம் அவுரித்திடலில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில உரிமை மற்றும் மாணவர் உரிமையைக் காக்க, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி இந்த
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி. எஸ். டி. ஏ. நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தி. மு. க மாவட்ட செயலாளர் என். கௌதமன், முன்னாள் எம். எல். ஏ வி. பி. நாகை. மாலி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.