தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று முதல் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, நாகை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை, மாவட்டத்தில் உள்ள 29 மீனவ கிராமங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. உதவி இயக்குனர் ஜெயராஜ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.