நாகையில் கடல் கடும் சீற்றம் கடலுக்கு செல்லாத மீனவர்கள்

4பார்த்தது
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடாவில் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற படகுகள் அவசர அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்குத் திரும்பியுள்ளன. நாகை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதாகவும், பலத்த மழை பெய்து வருவதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி