கடந்த 2022-2023 பட்ஜெட் அறிவிப்பின்படி, நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவர்களுக்காக தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் சார்பில் ரூ. 15 லட்சம் செலவில் டீசல் விற்பனை நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, கடற்கரையோர ஒழுங்கு மண்டல அனுமதி பெறப்பட்டுள்ளது. கலெக்டர் ஆகாஷ் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இந்த நிலையம் மூலம், விசைப்படகுகளுக்கு ஆண்டுக்கு 19,000 லிட்டர் மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 4,400 லிட்டர் மானிய விலையில் டீசல் வழங்கப்படும். இதன் மூலம் 41 விசைப்படகுகள் மற்றும் 185 கண்ணாடி நாரிழை நாட்டுப்படகுகளைக் கொண்ட நம்பியார் நகர் மீனவர்கள் சிரமமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியும்.