நாகையில் இலவச பயிற்சி.. கலெக்டர் தகவல்

304பார்த்தது
நாகையில் இலவச பயிற்சி.. கலெக்டர் தகவல்
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் RRB குரூப் D தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (பிப். 26) முதல் தினசரி மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடத்திட்ட வாரியாக இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். நாகை மாவட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.