நாகை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட பாப்பா கோயில் ஏறும் சாலை பகுதியில் பழக்கடை வைத்திருக்கும் விக்னேஷ், கடந்த இரண்டாம் தேதி காலை 10:30 மணிக்கு கடையைத் திறந்தபோது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த சுமார் 5,000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் வயல் அடமானப் பத்திரம் ஆகியவை எரிந்து நாசமாயின. இது தொடர்பாக விக்னேஷ் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.