நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாநில அரசு திட்டத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு கண்வா மீன்பிடி உபகரணங்கள் வாங்கிட 40 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டத்தில் அலகு ஒன்றிற்கான விலை ரூ. 50,000 இல் 40% மானியமாக ரூ. 20,000 வழங்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இத்திட்டத்தின் கீழ் 10 எண்ணிக்கை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் கீழ் 40 விழுக்காடு மானியத்தில் செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கும் திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 50 எண்ணிக்கை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தொலைபேசி ஒன்றின் மொத்தத் தொகை ரூ. 1,51,583 ஆகும்.
மானியம் அதிகபட்சம் ரூ. 40,000 நீங்கலாக அலகு ஒன்றின் விலை (தொலைபேசி விலை ரூ. 66,200 பதிவு மற்றும் ஆண்டுக் கட்டணம் ரூ. 45,383) ரூ. 1,11,583 ஆகும். எனவே, செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்படுகிறது. எனவே, மேற்படி திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மீனவர்கள் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பம் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், பெறப்படும் விண்ணப்பங்கள் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. ப. ஆகாஷ், தெரிவித்துள்ளார்.