நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 30,217.34 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவையில், 04.11.2025 வரை 27,543 ஹெக்டர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,674.34 ஹெக்டரில் அறுவடை மற்றும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. காரீப் 2025-2026 குறுவை பருவத்தில் திறக்கப்பட்ட 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 03.09.2025 முதல் 04.11.2025 வரை 1,07,764 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,010 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவரை 91,218 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.