காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகப்பட்டினத்தில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று காலை முதல் இன்று காலை வரை 57 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் சம்பா தாளடி பயிர்கள் பல ஆயிரம் ஏக்கரில் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.