நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் தலையில் இரத்த காயத்துடன் பெண் சடலம் கிடந்தது. வெளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நாகூரைச் சேர்ந்த சித்ரா(36) என்பது தெரியவந்தது. பணம் கேட்டு தகராறு செய்ததால், ஆத்திரமடைந்த அவரது கணவர் தர்மராஜ் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.