வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக மக்கள் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மையை வழங்கவில்லை என்றும், ஆட்சி அமைக்க நெருக்கமான எண்ணிக்கையை கொண்டவர்கள் எப்படி ஆட்சி அமைப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். குருவி தலையில் பனங்காயை வைப்பது என்ற பழமொழி போல் குருவி பாரத்தை சுமக்கிறதா பார்ப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.