நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலகப்புகழ் பெற்ற நாகூர் ஆண்டகை தர்காவின் 469வது ஆண்டு கந்தூரி விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆவடி நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். விழாவிற்கு தமிழக அரசு 45 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்க உள்ளதாக அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 20 கிலோ வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 40 கிலோ வழங்கப்பட்டு, தற்போது அது 45 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், பக்தர்களின் வசதிக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.