நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி தனபாலன், நதிநீர் தாவா சட்டத்தின் கீழ் காவேரி டெல்டாவின் கடைமடை மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை கேட்காமல் காவிரியில் எந்தவித கட்டுமான பணியும் மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தினார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தமிழக அரசிற்கு தெரிவித்து, தமிழக அரசு தீர்மானம் ஏற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.