மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. நாகை நகர அதிமுக செயலாளர் தங்க கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். புதிய பேருந்து நிலையம் நாகூர் பகுதியிலும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.