நாகப்பட்டினம்: சுவர்ண விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

74பார்த்தது
நாகப்பட்டினம் நாணயக்கார வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுவர்ண விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்; நாகை நாணயக்கார வீதியில் அமைந்துள்ள அருள்மிகு சுவர்ண விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது, 

தொடர்ந்து வாஸ்து சாந்தி, கோ- பூஜையுடன் யாகசாலை பூஜைகளுடன் நடைபெற்று வந்தது, தொடர்ந்து 3ஆம் கால யாகசாலை பூஜையில், பூர்ணாஹூதி நடைப்பெற்று கலசங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு நிறைவு பெற்றது, தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. 

சிவாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள சுவர்ண விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி