லாரி உரிமையாளர்கள் பேரணியாக சென்று மனு

0பார்த்தது
மத்திய, மாநில அரசுகள் கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, நாகப்பட்டினத்தில் 500-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதன் காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ரேஷன் கடைகளுக்கு அரிசி ஏற்றுவது மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றுவது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி