நாகை: மாபெரும் வாசிப்பு இயக்க முன்னெடுப்பு

81பார்த்தது
நாகப்பட்டினத்தில் ஆகஸ்டு -1 முதல் ஆகஸ்டு -11 வரை நடைபெறவுள்ள நான்காவது புத்தகத்திருவிழாவையொட்டி நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக "நாகை வாசிக்கிறது" எனும் மாபெரும் வாசிப்பு இயக்க முன்னெடுப்பு 30.07.2025 நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. 

நேற்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், அலுவலர்கள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டு "நாகை வாசிக்கிறது" எனும் நிகழ்வில் தங்களை இணைத்துக்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தின் அனைத்து வகை பள்ளிகளைச் சார்ந்த சுமார் ஒரு இலட்சம் மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் நம்பியார் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் 67 மாணாக்கரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் மாணவர்களோடு அமர்ந்து புத்தக வாசித்தார்.