நாகை: மகள் இறந்த சோகத்தில் தாயார் தற்கொலை

425பார்த்தது
நாகை: மகள் இறந்த சோகத்தில் தாயார் தற்கொலை
நாகை வெளிப்பாளையம் சின்னப்ப முதலியார் தெருவைச் சேர்ந்த ரவியின் மகள் நந்தினி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் தற்கொலையால் மனமுடைந்த அவரது தாயார் வசந்தா, திராவகம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி