என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடிஆலோசனைக் கூட்டம்

2பார்த்தது
நாகப்பட்டினம் அடுத்த தளபதி அறிவாலயத்தில் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ஒன்றிய அரசு பீகாரை பின்பற்றி தமிழக வாக்காளர் பட்டியலில் சிறுபான்மை மற்றும் ஆளும் கட்சி வாக்குகளை பறிக்கும் வகையில் சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் மோசடி செய்ய இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனால், எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டணி கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாமல் பிஜேபியை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்க இருப்பதால், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை வாக்குச்சாவடி முகவர்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.