நாகை நகர்மன்ற சாதாரண கூட்டம்

127பார்த்தது
நாகப்பட்டினம் நகர்மன்ற கூட்டம் நேற்று தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், துணைத்தலைவர் செந்தில்குமார், திராவிட மாடல் ஆட்சியில் 2500 பேருக்கு பட்டா வழங்க உத்தரவிட்ட முதல்வர், துணைமுதல்வர், மாவட்ட செயலாளர், நகர்மன்ற தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அதே சமயம், கவுன்சிலர் பரணிகுமார், கடந்த 10 நாட்களாக நகர பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லை என புகார் கூறினார். இதற்கு பதிலளித்த தலைவர், அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியால் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி