நாகையில், 7 மாத கர்ப்பிணியான சக்திபிரியா (29) புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்தாகக் கூறப்படுகிறது. கடந்த 28-ந்தேதி வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்து கணவர் வீட்டில் இருந்த நிலையில், தகராறால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சக்திபிரியாவின் பெற்றோர், மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளனர். திட்டச்சேரி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு வழக்கு அனுப்பியுள்ளனர்.