புதுச்சேரியில் நடைபெற்ற 13-ஆவது தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சுரேஷ்ராஜா 90 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அகில இந்திய சிலம்ப சம்மேளனம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், 13-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், புதுச்சேரி இரண்டாம் இடத்தையும், மேற்குவங்கம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.