நாகை: கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி? பரபரப்பு

5பார்த்தது
நாகை: கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி? பரபரப்பு
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (37) மற்றும் பரிமளா (33) காதல் திருமணம் செய்து கொண்டு பெருந்துறையில் வசித்து வந்தனர். உறவினர் இறப்புக்காக ஊருக்குச் சென்ற பரிமளாவிடம், அண்ணன் எங்கே என ஸ்ரீதரின் தம்பி புகழேந்தி கேட்டுள்ளார். தகராறில் ஸ்ரீதர் இறந்துவிட்டதாகவும், கார்த்திகேயன் என்பவரின் உதவியுடன் உடலை வாய்க்காலில் வீசியதாகவும் பரிமளா தெரிவித்துள்ளார். அண்ணியின் மேல் சந்தேகமடைந்த புகழேந்தி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் பரிமளா மற்றும் கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி