நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீண்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பன்முகத் திறமை கொண்டவர்களுக்கு 2027 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த மற்றும் அளப்பரிய சாதனைகள் அல்லது சேவைகள் புரிந்தவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.