நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, பட்டியலின சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புக்குள் நுழைந்து பொருட்களை சூறையாடியதுடன், அம்பேத்கர், திருமாவளவன் படங்களை உடைத்து அங்கிருந்த பெண்கள் மீது வீசியதாக அதிமுக பிரமுகர் ஸ்டீபன் உள்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கீழையூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.