நாகை மாவட்டம், தேவூரைச் சேர்ந்த காவியதர்ஷினி (22) என்ற நர்சிங் மாணவி, திருவாரூரிலிருந்து தேவூருக்கு அரசுப் பேருந்தில் வீடு திரும்பும்போது, பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து மோதி உயிரிழந்தார். இந்த விபத்துக்கு அரசு கடைத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என குற்றம்சாட்டி, உறவினர்கள், பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், தற்காலிக ஓட்டுநரை பயன்படுத்தியதைக் கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.