நாகூர் தர்கா கந்தூரி கொடி ஊர்வலம் துவங்கியது

4பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவில் 469வது கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தரும் இந்த விழாவிற்காக, நேற்று இரவு நாகப்பட்டினத்தில் வான வேடிக்கையுடன் விழா துவங்கியது. புனிதக்கொடிகள் இன்று மதியம் மீரா பள்ளி வாசலுக்கு வந்து சேர்ந்தன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட பல்வேறு ரதங்களில் புனிதக்கொடிகள் ஊர்வலமாக நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு இரவு 8.30 மணிக்கு வந்தடையும்.