நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த முட்டம் கிராமத்தில், முன்விரோதம் காரணமாக பரமசிவம், அவரது மனைவி பாக்யவதி, மகன் மகாதேவன் ஆகியோர் நரசிங்கமூர்த்தியை கழுத்தறுத்து கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கந்தக்குமார், குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பிறகு, பரமசிவம் மற்றும் மகாதேவன் கடலூர் சிறையிலும், பாக்யவதி திருச்சி மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.