போபால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த லலித் நாம்தேவ் (35) என்பவர் நாகை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் தையலகத்தில் கடந்த 3 மாதங்களாகப் பணியாற்றி வந்தார். புதன்கிழமை, அவர் தங்கி இருந்த தையலகத்தின் கதவு வெகுநேரம் திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நாகை நகர காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, லலித் நாம்தேவ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.