நாகையில், இந்திய தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜகவின் கை பாவையாக செயல்படுவதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.ஐ.ஆர்.ஐ கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் மாநாடு கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.