நாகை அடுத்த பனங்குடி, கோபராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மறுவாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.