நாகப்பட்டினம் அருகே பாப்பாகோயில் ஊராட்சிக்கு உட்பட்ட 8 மற்றும் 9வது வார்டுகளில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பாப்பாகோயில் கிராம மக்கள் காலி குடங்களுடன் நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.