நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியை பிரதான சாலையுடன் இணைக்கும் அரை கிலோமீட்டர் சிமெண்ட் சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும், அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. சாலை சீரமைக்கப்படாததால் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பள்ளிக்கு வருவதாகவும், சூரசம்ஹார விழாவின் போது சுவாமி புறப்பாட்டில் சிரமம் ஏற்பட்டதாகவும் பெற்றோர்களும், பக்தர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.