பாதாள சாக்கடை அமைத்து சாக்கடையை வெளியேற்ற கோரிக்கை

1பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் தெத்தி ஊராட்சி சிவசக்தி நகரில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அவதிக்குள்ளாகியுள்ளனர். நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதி எல்லைப் பிரச்சனைகளால் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி வீடுகளுக்கு முன்பும் தேங்கி நிற்பதால் கொசு, பூச்சிகள் உற்பத்தி ஆகி துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தால் ஊராட்சி நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து கழிவு நீரை வெளியேற்றவும், நகராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை இப்பகுதிக்கு வர விடாமல் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி