நாகப்பட்டினம் மாவட்டம் தெத்தி ஊராட்சி சிவசக்தி நகரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதாள சாக்கடை வசதி இன்றி தவிக்கின்றனர். நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகள் இணைந்திருப்பதால் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. நகராட்சி 13வது வார்டில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் சிவசக்தி நகரில் தேங்கி, கொசு உற்பத்தி, துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க மறுப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். உடனடியாக பாதாள சாக்கடை அமைக்கவும், கழிவுநீர் மாற்று ஏற்பாடு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.