நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உள்நாட்டு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வயல்வெளிகளில் சுதந்திரமாக திரியும் பறவைகளை வலை விரித்தும், கண்ணி வைத்தும் வேட்டையாடப்படுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.