நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 5 மூத்த தம்பதியினர் நேற்று சிறப்பு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இலுப்பூர் பகுதியை சேர்ந்த சுப்பையாபிள்ளை (100) மற்றும் அமராவதி (99) தம்பதியினர் உட்பட 5 தம்பதியினருக்கு பட்டு புடவை, பட்டு வேட்டி, சட்டை, மலர் மாலைகள், தாம்பளம், பழங்கள் வழங்கப்பட்டன. மேலும், நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி கோவிலிலும் 8 மூத்த தம்பதியினருக்கு மரியாதை செய்யப்பட்டது.