நாகை: பணி ஓய்வு பெறும் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

84பார்த்தது
நாகை: பணி ஓய்வு பெறும் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர் காந்திமதி, தலைமை ஆசிரியர் விஜயகுமாரி, ஆசிரியர்கள் பரமசிவம், ஜவகர் ஆகியோருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா திருமருகல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

விழாவிற்கு ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய தலைவர் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலர் ரமேஷ், மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் பாலாஜி வரவேற்றார். ஒன்றிய பொருளாளர் ஜோஸ்பின் புவனராணி அறிக்கை வாசித்தார். இதில் ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். 

இதில் மாவட்ட பொருளாளர் திருவருட்செல்வம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் அன்புமணி நன்றி கூறினார்

தொடர்புடைய செய்தி