மழையில் நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கும் அபாயம்

0பார்த்தது
கடந்த 8ஆம் தேதி வரை ரயில் மூலம் வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்பட்ட நிலையில், அதன் பிறகு லாரிகள் மூலம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் புத்தூர் அண்ணா சாலை முதல் நாகூர் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. சம்பா மற்றும் தாளடி பருவங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தன. தற்போது பெய்து வரும் கோடை மழையால் இந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடையும் அபாயம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி