நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பாதிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு சம்பா அறுவடைக்கு தயாராகி வருகிறது. தாளடி அறுவடையும் விரைவில் தொடங்கும். பருவம் தவறிய கனமழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், சம்பா பருவத்திற்கு ஈரப்பதம் தளர்வு வழங்க வேண்டும். மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான சாக்கு இருப்பு மற்றும் வலுவான கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும். வெளி மாநில நெல் கொள்முதலை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.