மயிலாடுதுறை: பள்ளிகளின் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

77பார்த்தது
மயிலாடுதுறை: பள்ளிகளின் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். இதில், தனியார் பள்ளிகள் பாதுகாப்பு மற்றும் நிரந்தர அங்கீகாரம் தொடர்பான கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. 

அக்கோரிக்கை மனுவை மாநில சங்கத் தலைமையிடம் அளிப்பது என்றும் டிச. 30-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள சங்கத் தொடக்க விழாவில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மாநில துணை பொதுச் செயலாளர் ராஜ்கமல், மாவட்ட செயலாளர் விக்ரம் மனோஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், ஆர். பாலாஜிபாபு, சமீருதீன், சுதாகர், மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணை தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவீரன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி