நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி செல்வகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது, பொதுமக்களிடமிருந்து மொத்தம் 17 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி செல்வகுமார் மனுதாரர்களுக்கு உறுதியளித்தார். மேலும், குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களை விரைவாக முடிக்குமாறு காவல் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.