துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

1பார்த்தது
இந்திய பெருங்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும், கடலில் பலத்த சூழைகாற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி