நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. நாகை நடராஜன் தயங்கி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் ஆகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். தேர்வு எழுதச் சென்ற மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். மொத்தம் 7175 பேர் இந்த தேர்வை எழுதினர்.