நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி முகாம்-2025 – 01.04.2025 முதல் 03.06.2025 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் எதிர்வரும் ஏப்ரல்-2025 முதல் ஜூன்-2025 வரை செயல்படுத்தப்படவுள்ளது. நீச்சல் பயிற்சி வகுப்பு நீச்சல் பயிற்சியாளர் மற்றும் உயிர்காப்பாளர்கள் பாதுகாப்புடன் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிர்வரும் 01.04.2025 முதல் 12.04.2025 வரை முதல் கட்ட பயிற்சியும், 13.04.2025 முதல் 25.04.2025 வரை இரண்டாம் கட்ட பயிற்சியும், 27.04.2025 முதல் 08.05.2025 வரை மூன்றாம் கட்ட பயிற்சியும், 10.05.2025 முதல் 21.05.2025 வரை நான்காம் கட்ட பயிற்சியும், 23.05.2025 முதல் 03.06.2025 வரை ஐந்தாம் கட்ட பயிற்சியும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.
12 நாட்களுக்கான பயிற்சி கட்டணம் ரூ.1500 மேற்கொள்ள வருபவர்கள் தங்களது பதிவினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சி கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் ஆகும். மகளிருக்கு மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.