நாகப்பட்டினம் அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மழை நீர் வடிகிறது. இதனால் சிகிச்சைப் பெறும் தாய்மார்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் வருவதால், அதை வெளியேற்றினாலும் தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருக்கிறது. இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் என்.பி. பாஸ்கரன், முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக கட்டிடத்தை ஆய்வு செய்து, அசம்பாவிதம் நடக்கும் முன் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.